50 வயதிலும் இளமையாக ஜொலிக்கலாம்: இதை மட்டும் செய்திடுங்கள் -
இதுபோன்ற அழகு குறைபாட்டு பிரச்சனைகளை போக்க இயற்கையான வழியில் உள்ள அற்புத டிப்ஸ்கள் இதோ,
தேவையான பொருட்கள்
- கடலை மாவு
- பீட்ரூட் சாறு
- தயிர்
- ரோஜா இதழ்
பயன்படுத்துவது எப்படி?
ரோஜா இதழை அரைத்து அதை பீட்ரூட் சாறு, கடலை மாவு, தயிர் ஆகியவற்றுடன் கலந்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி மென்மையாக துடைத்தால் முகத்தில் உள்ள கருமை மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.இம்மாற்றத்தை ஒரிரு தினத்தில் உணரலாம்.
முல்தானி மெட்டியுடன் சிறிதளவு பீட்ரூட் சாறு, பாதாம் ஆயில் ஆகியவற்றை கலந்து கண்களை சுற்றி தடவினால் கண்களுக்கு கீழ் விழும் கருவளையம் மறையும்.
பீட்ரூட் ஃபேஸியலுக்கு தேவையான பொருட்கள்
- ஆப்பிள்
- கேரட்
- பீட்ரூட்
- கடலை மாவு
பயன்படுத்தும் முறை?
ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகிய மூன்றையும் தோல் நீக்கி விட்டு நன்கு அரைத்து, அதனுடன் கடலை மாவை கலந்துக் கொள்ள வேண்டும்.பின் முகத்தை கழுவி விட்டு அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் கீழிருந்து மேல் நோக்கி தடவினால் கண்கள் மற்றும் உதட்டை தவிர்த்து தடவ வேண்டும்.
30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி துடைக்க வேண்டும். இம்முறையை 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை பின்பற்றலாம்.
இதனால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை, வறட்சி, கருமை ஆகியவை நீங்கு முகம் பளிச்சிடும்.
50 வயதிலும் இளமையாக ஜொலிக்கலாம்: இதை மட்டும் செய்திடுங்கள் -
Reviewed by Author
on
March 08, 2018
Rating:
No comments:
Post a Comment