மன்னார் மறைமாவட்ட பாதயாத்திரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மறைமாவட்ட பாதயாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தவக்காலத்தில் மன்னாரில் இருந்து வவுனியா கோமராசன்குளம் கல்வாரிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கமான செயல்பாடாக இருந்த போதும். கண்டி பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து இலங்கை அரசினால் இன்றுமுதல் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலசட்டத்திற்கு அமைவாக
07.03.2018 - 09.03.2018 வரை நடைபெறவிருந்த வவுனியா கோமராசன்குளம் பாதயாத்திரை மற்றும் 16.03.2018 அன்று நடைபெறவிருந்த பாதயாத்திரை ஆகியன மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி. இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் 09.03.2018 அன்று காலை 10.00 மணிக்கு கோமரசன்குள கல்வாரித்திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் மற்றும் 16.03.2018 அன்று காலை 8.30 மணிக்கு ஓலைத்தொடுவாய் கர்த்தர் திருத்தலத்தில் திருச்சிலுவைப்பாதையும் திருப்பலியும் இடம்பெறும்.
தகவல் - மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்.
மன்னார் மறைமாவட்ட பாதயாத்திரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
March 06, 2018
Rating:

No comments:
Post a Comment