மன்னார் மாவட்டத்தின் வரவேற்பு கோபுரத்திற்கான வரைபடமும் BOQம்- நகரசபை செயலாளாரிடம் கையளிப்பு-தமிழமுது நண்பர்கள் வட்டம்.
மன்னார் மாவட்டத்திற்கான வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் நகரசபையினாலும் RDAவினாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில் வரைபடமும் செலவீட்டுக்கணிப்பும்
(Welcome Tower Design&Estimate-BOQ )அடங்கிய அறிக்கையினை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்ட பொறியிலாளர் திருவாளர் தேவானந்த. BSc(Hons).PG.(struct)C Eng.MIE(SL)GREEN Sl,AP அவர்களுடன் பொறியியலாளர் S.விமலேஸ்வரன் M.Sc(Eng),B.Sc(Hons)Eng,
Civil Engineer இணைந்து தயாரிக்கப்பட்ட வரைபடமும் செலவீன அறிக்கையும் மன்னார் நகரசபைச்செயலாளர் திரு.X.L.பிறிட்டோ அவர்களிடம் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டஅமைப்பினர் 23-03-2018 அன்று உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.
பெற்றுக்கொண்ட செயலாளர் மிகவிரைவில் வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் இணைந்து மிகவிரைவாக கட்டியெழுப்புவதாக உறுதி வழங்கினார்.
வரவேற்பு கோபுரத்தில் -- அமையவுள்ள சிறப்பம்சங்கள்.........
மேல்பகுதியில் உள்ள 03 வட்டங்கள் முறையே
மன்னாரின் வரைபடம்
கடலும் பனையும்
நூலும்-பந்தும்-நெற்கதிரும்
மேல்பகுதியில் உள்ள 03 வட்டங்கள் முறையே
மன்னாரின் வரைபடம்
கடலும் பனையும்
நூலும்-பந்தும்-நெற்கதிரும்
(மன்னாரின் பிரதான தொழிலும் கல்வியறிவும் வீரமும் football குட்டிபிரேசில் என வர்ணிக்கப்படும் மன்னார் குறிக்கும்)
- மன்னார் நகர சபை அன்புடன் வரவேற்கின்றது-03மொழிகளிலும்
- மன்னாரின் உள்ள பிரதான சுற்றுலாதலங்கள் 12 பொறித்தல் அத்துடன் QR Code Barcode Scanner பதித்தல் அது தொடர்புடைய விபரஙளை இணையம் மூலம் வெளிப்படுத்தல்
- மன்னாரின் கலைப்பாரம்பரியம் வரலாறு தொடர்பான ஓவியங்கள் வரைதல்
இவ்வாறு அமைவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அமைந்தால் இது புதுமையானதும் மன்னாரின் தனிச்சிறப்புமிக்க அடையாளமும் ஆகும்.
மன்னார் மக்களினதும் முழுமையான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மிகவிரைவில் காட்சியாகும் ஏனைய மாவட்டங்களுக்கு சாட்சியாகும்.
மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய 18விடையங்கள் அடங்கிய அறிக்கையினை
மன்னாரின் எழுச்சி…. அதுவே எங்களின் முயற்சி……
மன்னனார் மாவட்டத்தினை எழுச்சிப்பாதையில் கொண்டு செல்லவேண்டுமானால் அதிகாரிகளும் மக்களாகிய நாமும் இனம்-மதம் மொழி பிரதேசவாதம் இவற்றினை கைவிட்டு வேற்றுமை மறந்து ஒற்றுமையாக ஓரணியில் ஒன்றினைய வேண்டும்.
ஒற்றுமையுடன் செயலாற்றினால் எமது மன்னார் மாவட்டமானது ஏனைய மாவட்டங்களை விட சிறந்த மாவட்டமாக முதன்மையான மாவட்டமாக மிளிரும் என்பதில் ஜயம் இல்லை….
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்….முதலில் இவற்றினை உருவாக்குவோம்……
- மன்னார் மாவட்டத்திற்கு வரவேற்பு கோபுரம்-welcome tower வேண்டும்
- மன்னார் மாவட்டத்திற்கு மணிக்கூட்டுக்கோபுரம்-Clock tower வேண்டும்
- மன்னார் மாவட்டத்திற்கு சமிக்ஞை விளக்குகள்-signal light பொருத்த வேண்டும்.
- மன்னார் மாவட்டத்தின் பொது நூலுகம் சிறப்பாக உருவாக்குவதோடு கிராமப்புற நூலகங்களையும் தரமுயர்த்துதல் வேண்டும்.
- மன்னார் மாட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல் அவசியம்(கல்வியால் தான் இவ்வுலகில் நிலைத்து நிற்கமுடியும்)
- மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்துவதோடு தூய்மையான மன்னார் மாவட்டத்தினை உருவாக்குதல் வேண்டும்.
- மன்னார் மாவட்டதிற்திற்கு சிறந்த முறையில் ரவுண்-Town பகுதி அமைத்தல் வேண்டும்
- மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளும் தரமான முறையில் புனரமைக்கப்பட்டு மஞ்சள் கோடு மற்றும் வெள்ளக்கோடு குறியீட்டுப்பலகைகள் அமைத்தல் வேண்டும்.
- மன்னார் பொதுவைத்திய சாலை உட்பட ஏனைய கிராமப்புற வைத்தியசாலைகளுக்கும் தரமான நவீன உபகரணங்களும் நிபுணத்துவமும் கடமையுணர்வும் உள்ளவர்களை நியமிக்கபட வேண்டும்.
- மன்னார் மாவட்டத்தில் உள்ள புராதன சின்னங்கள் அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும்.(12மேற்பட்டவை உள்ளது)
- மன்னார் மாவட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு பூங்கா வேண்டும்.
- மன்னார்க்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மன்னாரின் சிறப்பை அறியும் பொருட்டு சுற்றுலா கையேடு ஒன்று உருவாக்கப்படவேண்டும்.
- மன்னார் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து மன்னார் மாவட்ட விளையாட்டு சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதோடு ஆண்டுக்கு ஒவ்வொருதடவையும் வீரவீராங்கனைகளையும் பயிற்றுனர்களையும் அதிகாரிகளையும் கௌரவித்தல் வேண்டும்.
- மன்னார் மாவட்டத்தின் வளங்கள் சுரண்டப்படுகின்றது அவற்றைத்தடுக்கவேண்டும் குறிப்பாக மணல்-மரம்-பனைஅழிப்பு இன்னும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான அரச அரசசார்பற்ற திணைக்களங்கள் நிறுவனங்கள் அனைத்திலும் தமது தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைதல்.
- மன்னாரின் குளங்களை புனரமைத்தல் விவசாயத்தினை பேணுதல்
- மன்னாரின் வேலையில்லாப்பட்டதாரிகள் தீர்வை பெறுதல்.
இன்னும் ஏராளமான விடையங்கள் இருக்கு முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை
முயற்சிப்போம். முடியும் வரை…..முன்வைத்து மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அதிலும் முதல் இரண்டு விடையங்களாக
- மணிக்கூட்டுக்கோபுரம்
- வரவேற்புக்கோபுரம்
மன்னாரின் அடையாளமும் அழகு சார்நத விடையங்களை முன்னிறுத்தி 02-08-2017 அன்று மன்னார் பழைய நூலகத்திற்கு முன்பாக தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பின் இயக்குநர் வை.கஜேந்திரன் தலைமையில் நான்கு மதத்தலைவர்களின் ஆசியுடன் உத்தியோகபூர்வமாக கையெழுத்துப்பதிவானது ஆரம்பமானது.
அதனைத்தொடர்ந்து…..
- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களிடமும்.
- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அவர்களிடமும்
- வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடமும்
- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களிடமும்
- மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டி மெல் அவர்களிடமும்
- மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர் எம்.பரமதாசன் அவர்களிடமும்
- மன்னார் நகர சபைச்செயலாளர் எக்ஸ்.எல்.பிறிட்டோ அவர்களிடமும்
- மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்றுப்பொறியியலாளர் V.G.R.ஜிப்ரி அவர்களிடமும்
பதிவுத்தபாலில்…..
- கௌரவ ஜனாப் றிஷாட்பதியுதீன் கைத்தொழில் வணிக அமைச்சர்
- கௌரவ ஜனாப் கே.கே.மஸ்த்தான் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி
- கௌரவ ரெஜினோல்ட் குரே ஆளுநர் வடமாகாணம்
கையளித்துள்ளார்கள்.
மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டஅமைபிபனரின் முயற்சியும் வெற்றியளிக்கவேண்டும்.வரவேற்புக்கோபுரம் தொடர்பான அனுமதி பெறலும் அதன் செலவினங்கள்
(Welcome tower
design&Estimate-BOQதொடர்பான அறிக்கையினையும்
Provincial Director
R.D.A
Vavuniya
Chief Ingineer
R.D.A
Vavuniya
Executive Engineer
R.D.A
Mannar
மேலே குறிப்பிட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கவேண்டும் அது தொடர்பான வேலையில் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைப்பினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.மக்களினதும் அரசாங்க அதிகாரிகளினதும் ஒத்துழைப்போடு மன்னாரை அடையாளமாக தோற்றம் பெறஇருக்கின்றது மன்னாரின் வரவேற்புக்கோபுரம்.



மன்னார் மாவட்டத்தின் வரவேற்பு கோபுரத்திற்கான வரைபடமும் BOQம்- நகரசபை செயலாளாரிடம் கையளிப்பு-தமிழமுது நண்பர்கள் வட்டம்.
Reviewed by Author
on
March 24, 2018
Rating:

No comments:
Post a Comment