மன்னார் மாவட்டத்தில் "வன்னி உதைபந்தாட்ட சமர் 2018"
தாயக விருட்சத்தின் ஒருங்கமைப்பில்,சுவிஸ் வாழ் விழையாட்டுக்கழகங்கள்,மூத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் நிறுவனங்களின் அமோக ஆதரவோடு நான்கு மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கழகங்களை இணைத்து நடை பெறு இருக்கும் இரண்டாவது "வன்னி உதைபந்தாட்ட சமர் 2018" வருகின்ற 24,25 ம் திகதிகளில் விமர்சையாக நடைபெற உள்ளது.இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் உள்ள அடம்பன் பிரதேசத்தில் நடைபெற இருக்கின்றது.
ஆற்றுப்படுத்தலாக நடைபெற இருக்கும் இந்த இரண்டுநாள் சுற்றுப்போட்டியில் 39 ஆட்டங்கள் நடை பெற உள்ளன.இது நிட்சயம் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.அத்தோடு 10 போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கும் வாழ்வாதாரமும் வழங்கப்பட இருக்கின்றது.
- 1ம் பரிசாக 50'000.00
- 2ம் பரிசாக 25'000.00
- 3ம் பரிசாக 10'000.00
4-24 ம் இடம் தலா 5000.00 ரூபாய்கள் ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்பட இருக்கின்றது.
சனிக்கிழமை காலை சரியாக 8:00 மணியளவில் 24 கழகங்களோடு ஆரம்பிக்கும் போட்டியானது இரவு மின் ஒளி வரைக்கும் தொடர்ந்து செல்லும்.மறுநாள் ஞாயிறு அன்று 16 கழகங்கள் தொடர்ந்து ஆடும்.
மேலதிக விபரம்கள் அறிந்து கொள்ள
தொடர்பு
செல்.ஜீவன் 0750490787
மன்னார் மாவட்டத்தில் "வன்னி உதைபந்தாட்ட சமர் 2018"
Reviewed by Author
on
March 24, 2018
Rating:

No comments:
Post a Comment