முசலியில் இடம் பெற்ற விபத்தில் முசலி பிரதேசச் செயலாளர் காயம்.
திங்கட்கிழமை 5-03-2018 மாலை 7 மணியளவில் சிலாவத்துறை- மரிச்சிக்கட்டி செல்லும் பிரதான வீதிக்கு அருகாமையில் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் மற்றும் சில ஊழியர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
-இதன் போது குறித்த வீதியூடாக அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுபாட்டை இழந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
-இதன் போது முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் மற்றும் ஊழியர் ஒருவரும் காணமடைந்த நிலையில் உடனடியாக சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்hக பிரதேசச் செயலாளர் மற்றும் ஊழியர் ஆகிய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த சட்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முசலியில் இடம் பெற்ற விபத்தில் முசலி பிரதேசச் செயலாளர் காயம்.
Reviewed by Author
on
March 07, 2018
Rating:

No comments:
Post a Comment