இலங்கையர்களினால் பேஸ்புக் நிறுவனத்திற்கு இத்தனை கோடி வருமானமா? -
இலங்கையர்கள் பயன்படுத்தும் பேஸ்புக் கணக்குகள் மூலம் மாதாந்தம் 50 கோடி ரூபா வரையில் பேஸ்புக் நிறுவனம் வருமானம் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேஸ்புக் கணக்கு உரிமையாளர்களிடம் விளம்பரம் காட்சிப்படுத்தல் மற்றும் பேஸ்புக் கணக்கு உரிமையாளர்கள் வர்த்தக மற்றும் பிரச்சார நோக்கத்தில் வெளியிடும் விளம்பரம் மூலம் இந்த வருமானம் ஈட்டப்படுகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் 6.5 மில்லியன் பேஸ்புக் கணக்குகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் தினமும் இயங்கும் கணக்குகளின் எண்ணிக்கை 20 இலட்சமாகும்.
சாதாரண ஒரு இலங்கையரின் பேஸ்புக் கணக்கு இயங்குவதன் ஊடாக வருடத்திற்கு ஒரு டொலர் பேஸ்புக் நிறுவனத்திற்கு கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் நிறுவனம் தெற்காசிய நாடுகளில் கிடைக்கும் தனி நபர் வருமானத்திற்கமைய இலங்கை இராண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இவ்வளவு வருமானத்தை அமெரிக்க நிறுவனம் பெற்றுக் கொள்கின்ற போதிலும், இதனால் இலங்கைக்கு எவ்வித வருமானமும் கிடைப்பதில்லை என கூறப்படுகின்றது.
இலங்கையர்களினால் பேஸ்புக் நிறுவனத்திற்கு இத்தனை கோடி வருமானமா? -
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment