உலகில் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் -
பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊழல்கள் இரண்டும் ஒன்றோடன்று கைகோர்ந்து செல்பவை. மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்களால் அரசின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் ஊழல்களே ஒரு நாட்டை பொருளாதார வீழ்ச்சிக்கும் ஏழ்மைக்கு இட்டுச் செல்கின்றன.
சில நாடுகளில் அரசின் கொள்கைகளும் செயல்பாடுகளும் ஊழலுக்கு காரணியாக அமைகின்றன. இதனால் அரசு அதிகாரிகளே அரசியல்வாதிகளுடன் இணைந்து பெரும் ஊழல்வாதிகளாக மாறுகின்றனர்.
Transparency International என்ற தனியார் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், உலகில் ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில் ஒன்றான சோமாலியா ஊழலின் பிறப்பிடமாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த சோமாலியா தற்போது அரசின் தவறான கொள்கை முடிவுகளால் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் வெறும் 26 விழுக்காடு மக்கள் மட்டுமே பாடசாலைகளில் பதிவு செய்து கல்வி பயின்று வருவது தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி சராசரி சோமாலிய மக்களின் ஆயுட்காலம் 55 வயது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சோமாலியா போலவே இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள பல நாடுகளின் நிலையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல்:
- சோமாலியா
- தெற்கு சூடான்
- சிரியா
- ஆப்கானிஸ்தான்
- ஏமன்
- சூடான்
- லிபியா
- வட கொரியா
- கினியா-பிசாவு
- ஈக்வடோரியல் கினியா
- வெனிசுலா
- ஈராக்
- துர்க்மேனிஸ்தான்
- அங்கோலா
- எரிட்ரியா
உலகில் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் -
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment