"கரையோரம் பேணல்" பாடசாலை மாணவர்களுக்காண விழிப்புணர்வு கருத்தரங்கு.....படங்கள்
திணைக்களம் ஏற்பாடு செய்த "கரையோர சுற்றுச்சூழலை பாதுகாத்தலும் கரையோர பொருளாதார மூலவளங்களின் பொருளாதார முக்கியத்துவமும்" எனும் தொணிப்பொருளில்
பாடசாலை மாணவர்களுக்காண விழிப்புணர்வு கருத்தரங்கு
இன்று காலை 09 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு M.பரமதாசன் உதவி பிரதேச செயலாளர் திருமதி.K.சிவசம்பு தலைமையில் மற்றும் திரு.J.A.டானியல் திட்டமிடல் அலுவலர் திரு.மொரிசியஸ் கரையோரக்காவலர் ஒழுங்கமைப்பில் இவர்களுடன்
- மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
- மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
- மன்.புனித லூசியா றோ.க.த.க பாடசாலை
- மன்.உயித்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை
- மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துப்பாடசாலை
- மன்.எழுத்தூர் றோ.க.த.க பாடசாலை
- மன்.அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலை
07 பாடசாலைகளில் இருந்து சுமார் 200ற்கும் மேற்பட்ட மாணவமாணவிகளுடன் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்நிகழ்வானது மாணவர்களிடையே "கரையோர சுற்றுச்சூழலை பாதுகாத்தலும் கரையோர பொருளாதார மூலவளங்களின் பொருளாதார வளம் தொடர்பான விழிப்புணர்வையும் அறிவினையும் விருத்தி செய்வதற்கு ஏதுவாக அமைந்தது எனலாம்.
தொகுப்பு வை.கஜேந்திரன்.

"கரையோரம் பேணல்" பாடசாலை மாணவர்களுக்காண விழிப்புணர்வு கருத்தரங்கு.....படங்கள்
Reviewed by Author
on
March 15, 2018
Rating:

No comments:
Post a Comment