மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு –(படம்)
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் தமது நீர்ப்பட்டியலில் ஒரு மாதத்திற்கு மேல் நிலுவைத்தொகை காணப்பட்டால் உடனடியாக முழுத்தொகையினையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன் செலுத்தி நீர்த்துண்டிப்பினை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெறுப்பதிகாரி தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் எதிர்வரும் 12ம்திகதி திங்கட்கிழமைக்கு முன் ஒரு மாதத்திற்கு மேல் தங்களின் நீர்ப்பட்டியலில் நிலுவைத்தொகை இருந்தால் குறித்த நிலுவைத்தொகயினை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன் செலுத்த வேண்டும்.
-முழுத்தொகையினையும் செலுத்தாத பாவனையாளர்களுடைய இணைப்புக்கள் துண்டிக்கப்படும்.
துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை மீள்இணைப்பு செய்ய தண்டப்பணம் அறவிடப்படும்.
எனவே 12 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் நிலுவைத்தொகையினை செலுத்தத் தவறும் பட்சத்தில் அன்றைய தினம் நீரிணைப்பு துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு –(படம்)
Reviewed by Author
on
March 07, 2018
Rating:

No comments:
Post a Comment