தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் பொது மக்களின் காணிகள்: ஐநாவில் குற்றச்சாட்டு -
பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்கும் நோக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சந்திர லீலா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37 கூட்டதொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இந்த கூட்ட தொடரில் கலந்துகொண்டுள்ள அவர் லங்காசிறி செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பகுதியில் கடந்த ஒரு வருடகாலமாக காணி மீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது“ என அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் பொது மக்களின் காணிகள்: ஐநாவில் குற்றச்சாட்டு -
Reviewed by Author
on
March 20, 2018
Rating:

No comments:
Post a Comment