முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல் காந்தி!
இன்று சிங்கப்பூரில் விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி மரணம் குறித்து பேசினார்.
அப்போது ராஜிவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம். பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் என்றார்.
மேலும் நானும், எனது தங்கை பிரியங்காவும் எப்போதோ அவர்களை மன்னித்து விட்டோம். தொடக்கத்தில் எங்களுக்கு கோபம் இருந்தது, இப்போது இல்லை என்றுள்ளார்.
இது குறித்து தற்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அளித்துள்ள பேட்டியில் ராகுல் காந்தி பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
27 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் காந்தி இப்படி சொன்னது மகிழ்ச்சியான செய்தி' என்று கூறியுள்ளார்.
- One India-
முருகன் சாந்தன் பேரறிவாளனை மன்னித்த ராகுல் காந்தி!
Reviewed by Author
on
March 12, 2018
Rating:

No comments:
Post a Comment