பிரபாகரனுக்காக வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி -
அத்துடன், பிரபாகரனின் மரணத்தை பார்த்த போது, “இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்” என எண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கபூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், முன்னாள் ஐ.ஐ.எம் மாணவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாங்கள் மன்னித்துவிட்டோம். தனது தந்தை படுகொலை செய்யப்பட்டதை நினைத்து வேதனை அடைந்தோம்.
கொலையாளிகள் மீது நீண்ட காலமாக கோபத்தில் இருந்தோம். தற்போது கொலையாளிகளை முழுமையாக மன்னித்து விட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது இரு விடயங்களை நினைக்கத் தோன்றியது.
ஒன்று “இலங்கை இராணுவத்தினர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்” என்பது. மற்றையது பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன்.
வன்முறையை தாண்டி பிரபாகரன் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. அவருக்காக அவரது குழந்தைகள் அழுவர்கள். நான் இதுபோன்ற வலிகளை அனுபவித்திருக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என் தந்தை கொல்லப்படுவார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் - ராகுல் காந்தி
தனது தந்தை கொல்லப்படுவார் என்று தான் மாத்திரமல்லாது தமது குடும்பத்தினரும் அறிந்திருந்ததாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரை கொலை செய்தவர்களுக்கு தான் மட்டுமல்லாது சகோதரியான பிரியங்கா காந்தியும் முழுமையாக மன்னிப்பு வழங்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தந்தை மாத்திரமல்ல, தனது பாட்டியான முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட போகிறார் என்பதை குழு குடும்பமும் அறிந்திருந்தது.
பல வருடங்கள் நாங்கள் மிகவும் கவலையிலும், துன்பத்திலும் இருந்தோம். எனினும் நாங்கள் முற்றாக மன்னிப்பு வழங்க விரும்புகிறோம்.
அரசியலில் தவறான அணியுடன் மோதினால் அல்ல எதற்காகவாவது குரல் கொடுத்தல் நீங்க கொல்லப்படுவீர்கள்.எமது தந்தை கொல்லப்படுவார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
தான் கொல்லப்படலாம் என எனது பாட்டி என்னிடம் கூறினார். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று என் தந்தையிடம் நான் கூறினேன் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்பாதுகாவலரால் கடந்த 1984 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டதுடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகில் ஸ்ரீ பெரம்புத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பிரபாகரனுக்காக வேதனையடைந்தேன்: ராகுல் காந்தி -
Reviewed by Author
on
March 13, 2018
Rating:

No comments:
Post a Comment