தமிழர்களை அச்சுறுத்திய பிரிக்கேடியருக்கு எதிராக முதன்முறையாக இராணுவத்தின் நடவடிக்கை!
பிரித்தானியாவிலுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு தேவைகளுக்காக நிதி உதவியை வழங்க இராணுவம் தீர்மானித்துள்ளது.
இராணுவ தளபதியின் உத்தரவிற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அவரது குடும்பத்தினர் இன்னமும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
பிரியங்க நாட்டுக்கு அழைக்கப்பட்டமையினால் தூதரக பணிக்காக அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு பிரிகேடியர் பதவிக்கான சம்பளம் மாத்திரமே கிடைக்கின்றது.
அதற்கமைய முதற்கட்டமாக இராணுவ தளபதியின் உத்தரவுக்கு அமைய பிரியங்கர பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் அவருக்கு நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜதந்திர ரீதியான சம்பவம் ஒன்று முகம் கொடுத்துள்ள இராணுவ அதிகாரியின் குடும்பத்திற்காக, இந்த முறையில் இராணுவம் நிதி உதவி வழங்கும் வரலாற்றில் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர்களை அச்சுறுத்திய பிரிக்கேடியருக்கு எதிராக முதன்முறையாக இராணுவத்தின் நடவடிக்கை!
Reviewed by Author
on
March 05, 2018
Rating:

No comments:
Post a Comment