ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை! ஆய்வில் வெளியாகிய தகவல் -
உலக காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அபிவிருத்தி, வளர்ச்சி மற்றும் முன்னணி சந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும் 67 நாடுகள் தெரிவு செய்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புவி வெப்பமடைதலினால் மழை குறைவடைதல், காற்று, வெள்ளம் போன்ற காலநிலைகள் இலகுவாக ஏற்பட கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 67 நாடுகள் உலக சனத்தொகையில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாளர்கள் 94 வீதமானோர் பிரதிநிதித்துப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வங்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விற்கமைய காலநிலை மாற்றத்தினால் அதிக அழுத்தத்திற்குள்ளாகும் நாடாக இந்தியா முதல் இடம்பிடித்துள்ளது.
பிலிபைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடத்தில் பெயரிடப்பட்டுள்ளது.
ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை! ஆய்வில் வெளியாகிய தகவல் -
Reviewed by Author
on
March 21, 2018
Rating:

No comments:
Post a Comment