இலங்கை: முதல் போட்டியில் அபார வெற்றி -
இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியாக இன்று இந்தியா-இலங்கை அணிகள் மோதின. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன் படி இந்திய அணிக்கு ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆட்டத்தின் முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ஓட்டம் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. மணிஷ் பாண்டே நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 30 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
இதைத் தொடர்ந்து 12.4 ஓவரில் இந்திய அணி 104 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மணிஷ் பாண்டே 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மணிஷ் பாண்டேவை அடுத்து ரிஷப் பந்த் களம் இறங்கினார். அரைசதம் அடித்த தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ரிஷப் பந்தால் அதிரடியாக விளையாட முடியவில்லை.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 90 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்
இறுதியாக இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக குணதிலகா-மெண்டிஸ் களமிறங்கினர்.
குணதிலகா 19 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையிலும், மெண்டிஸ் 11 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையிலும் வெளியேற, இலங்கை அணி சற்று தடுமாறியது.
இலங்கை அணிக்கு ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தாலும் குசால் பெரேரா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒற்றை ஆளாக இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்.
இதனால் அரைசதம் கடந்த அவர் 37 பந்தில் 66 ஓட்டங்கள் எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில், தினேஷ்கார்த்திக் ஸ்டெம்பிங் மூலம் பவுலியன் திரும்பினர்.
இறுதியில் திசாரா பெரேரா அதிரடி காட்ட இலங்கை அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குசால் பெரேரா 66 ஓட்டங்களும், திசார பெரேரா 22 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர், சஹால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் விழ்த்தினர்.
அணியின் வெற்றிக்கு உதவியக் குசால் பெரேரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை: முதல் போட்டியில் அபார வெற்றி -
Reviewed by Author
on
March 07, 2018
Rating:
No comments:
Post a Comment