அரிய வகை பறக்கும் பாம்பு கண்டுபிடிப்பு: எங்கே தெரியுமா? -
ஒடிசாவின் மயூர்பஞ்ச் எனும் ஊரில் விறகு கட்டைகளை சைக்கிளில் ஏற்றிச்சென்ற போது அதில் இந்த பாம்பு காணப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இந்த பாம்பு இருந்ததால் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் மீட்பு குழுவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பாம்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர்.
இதை கண்ட அதிகாரிகள் இந்த அரிய வகை பாம்பு பறக்கும் தன்மை உடையது என்பதை கண்டறிந்துள்ளனர்.
இந்த அரிய வகை பாம்பு இனங்கள் ஆரனேட் ஃப்ளையிங் ஸ்நேக் என அழைக்கப்படுகின்றது. இவை இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை.
இருந்தாலும் இவை இந்தியாவில் அங்காங்கே குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இருப்பினும் இந்தியாவில் இங்கு தான் முதன் முறையாக நாங்கள் பார்க்கிறோம் என வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
தென்கிழக்கு ஆசியாவில் இவை அதிகளவு காணப்படுகின்றன. சிவப்பு நிற பாம்பின் உடலில் உள்ள இடைவெளிகளில் கறுப்பு குறுக்குவெட்டுகள் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கின்றன.
இந்த விஷதன்மை கொண்ட பறக்கும் பாம்பு வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.
அரிய வகை பறக்கும் பாம்பு கண்டுபிடிப்பு: எங்கே தெரியுமா? -
![]() Reviewed by Author
        on 
        
March 19, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
March 19, 2018
 
        Rating: 
       
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment