அவதார் பட சாதனையை சமன் செய்த பிளாக் பாந்தர்
அவதார் பட சாதனையை சமன் செய்த பிளாக் பாந்தர் சென்ற மாதம் வெளியான பிளாக் பாந்தர் திரைப்படம் உலக அளவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த படம் $1.1 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் 2009ம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் ஒரு முக்கிய சாதனையை சமன் செய்துள்ளது. 5 வாரங்களாக தொடர்ந்து பிளாக் பாந்தர் வசூலில் முதலிடத்தில் இருப்பது தான் அந்த சாதனை.
அவதார் படத்திற்குமுன் 1999ல் வெளியான The Sixth Sense என்ற படம் தான் இந்த சாதனையை படைத்திருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு ஒரு படம் மட்டுமே இந்த சாதனையை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவதார் பட சாதனையை சமன் செய்த பிளாக் பாந்தர்
Reviewed by Author
on
March 19, 2018
Rating:

No comments:
Post a Comment