மன்னாரில் பலா மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஆராம்பித்து வைப்பு-(படம்)
வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் பலா மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் மன்னார் பேசாலை புனித மரியாள் பாடசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை(23) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வன்னி பிராந்தியத்தில் 22 பொலிஸ் நிலையங்களிற்குட்பட்ட பகுதிகளில் தலா 500.பலா மரக்கன்றுகள் நடும் வேளைத்திட்டம் வன்னி பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோண் அவர்களின் வளிகாட்டலில் இடம் பெற்று வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பேசாலை புனித மரியாள் பாசாலையில் வைபவ ரீதியாக தேசபந்து தென்னக்கோண் அவர்கள் கழந்து கொண்டு 50 பலா மரக்கன்றுகலை பாடசாலை வழாகத்திற்குள் நட்டு வைத்ததுடன் மேலும் பல கன்றுகளை சிறுத்தோப்பு பாடசாலை மற்றும் நிகழ்வில் கழந்துகொணட பெற்றோர்களுக்கும் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வு பேசாலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி P.சிறில் தலைமயில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ்.ராயேஸ்வரன் பச்சேக் மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாஸன் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் பலா மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் ஆராம்பித்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
March 23, 2018
Rating:

No comments:
Post a Comment