உலகிலேயே இங்கு தான் விலைவாசி அதிகமாம்! -
இம்முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தொடர்ந்து ஐந்தாவது முறையாக விலைவாசி அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளதைக் காட்டுகின்றன.
சோப்பு, ஷாம்பூ போன்ற பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை சிங்கப்பூரில் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
பாரீஸ், பிரான்ஸ் மற்றும் சூரிச் போன்ற நகரங்கள் விலைவாசிப் பட்டியலில் சற்று முன்னோக்கி நகர்ந்தாலும் வாழ்வதற்கு மிக அதிக செலவு பிடிக்கும் நகரமாக சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துவிட்டது.
உதாரணத்திற்கு ஒரு கார் வாங்குவதை எடுத்துக் கொண்டால் அது சிங்கப்பூரில் உங்கள் பர்ஸை மொத்தமாக காலி செய்யும் விடயமாகும். அதற்கு அடுத்த இடத்தைப் பிடிப்பது ஆடைகள்.
ஒரு ஒயின் பாட்டிலின் விலையைக் கேட்டால் குடிக்காமலே தலை சுற்றும். பாரீஸில் 11.90 டொலர்கள் என்றால் சிங்கப்பூரில் ஒரு ஒயின் பாட்டிலின் விலை $23.68 டொலர்கள் ஆகும்.
இவையெல்லாம் சேர்ந்துதான் சிங்கப்பூரை உலகிலேயே அதிக விலைவாசியுடைய நகரமாக ஆக்கியுள்ளன.
உலகிலேயே இங்கு தான் விலைவாசி அதிகமாம்! -
Reviewed by Author
on
March 16, 2018
Rating:

No comments:
Post a Comment