பதவியிலிருந்து ஒய்வு....பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா.
மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளராக கடந்த 08 ஆண்டுகளாக பணிபுரிந்த திரு. பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா அவர்கள் தனது 30 வருடகால சேவையை பூர்த்தி செய்துள்ளார்.
கடந்த 1988 ஆம் ஆண்டில் கடற்றொழில் பரிசோதகராக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் பின்னர் கிளிநொச்சி மாவட்டதிற்கு 2005 ஆம் ஆண்டு கடற்றொழில் உதவிப் பணிப்பாளராக 2005 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சென்று 2010 வரை கடமையாற்றினார். அக்கால போர்ச்சூழல் காலகட்டத்திலலும் மீனவ சமுதாயத்தின் முன்னேற்றதிக்காக பெரிதும் பாடுபட்டார்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் அவர் சேவையாற்றும் காலத்தில் மீனவ சமுதாயத்தின் அபிவிருத்திக்காக பல திட்டங்களை வகுத்து அவற்றுட் பெரும்பாலானவர்களை நடைமுறைப்படுத்தினார்.
மேலும் தற்போது புதிய உதவிப்பணிப்பாளராக திரு.விசக்ரம்சிங்ஹ என்னும் பெரும்பான்மை இனத்த நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
பதவியிலிருந்து ஒய்வு....பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா.
Reviewed by Author
on
April 25, 2018
Rating:

No comments:
Post a Comment