இவருக்கு சம்பளம் 1 டொலர், பாதுகாப்புச் செலவோ 9 மில்லியன் டொலர்கள்! -
கடந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனம் ஜுக்கர்பர்கின் பாதுகாப்பிற்காக செலவிட்ட தொகையான 5.8 மில்லியன் டொலர்களைவிட 2017ஆம் ஆண்டு 50 சதவிகிதம் அதிகம் செலவிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பொருளாதார அறிக்கை தெரிவிக்கிறது.
2015 ஆம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 20 மில்லியன் டொலர்களை ஜுக்கர்பர்கின் பாதுகாப்பிற்காகவும் தனி விமானப் பயணங்களுக்காகவும் பேஸ்புக் செலவிட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என்னும் முறையில் அவர் எதிர்கொள்ளும் அபாயங்களிலிருந்து அவரை பாதுகாப்பதற்காகவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜுக்கர்பர்க் முக்கியம் என்பதால் நிறுவனத்தின் நன்மைக்காகவே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜுக்கர்பர்கின் விமான செலவுகள் மட்டுமின்றி அவரது தனிப்பட்ட மற்றும் அவரது வீட்டின் பாதுகாப்பிற்காகவும் பேஸ்புக் நிறுவனம் செலவு செய்கிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் chief operating officerஆன Sheryl Sandbergஇன் பாதுகாப்பு செலவுகளையும் நிறுவனமே ஏற்கிறது.
22.5 மில்லியன் டொலர்கள் சம்பளத்துடன் 2.7 மில்லியன் டொலர்கள் Sherylஇன் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும் செலவிடப்படுகிறது.
இந்த வாரம் ஜுக்கர்பர்க், 87 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தின்முன் 10 மணி நேரம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சம்பளம் 1 டொலர், பாதுகாப்புச் செலவோ 9 மில்லியன் டொலர்கள்! -
Reviewed by Author
on
April 17, 2018
Rating:

No comments:
Post a Comment