திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் -
குறித்த அமர்வு இன்று மாலை நடைபெற்றுள்ளது. இதன் போது தலைவர் தெரிவு இடம்பெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு மூன்று பேர் முன்மொழியப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஞானநாயகம் ஞானகுணாளன் மற்றும் கந்தசாமி கோணேஸ்வரன் மற்றும் ஸ்ரீலாங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்துன் ரட்னாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதனை தொடர்ந்து முன்மோழியப்பட்ட மூவருக்கும் இடையே வாக்கெடுப்பு இடம் பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வைத்திய கலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளனுக்கு 15 வாக்குகள் கிடைத்ததுடன், சந்துன் ரட்னாயக்கவிற்கு 7 வாக்குகள் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட கந்தசாமி கோணேஸ்வரநாதன் எந்த வாக்குகளையும் பெறவில்லை. தனது வாக்கையும் வைத்திய கலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளனுக்கு வழங்கியிருந்தார்.
இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து தலைவர் வைத்திய கலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் அவர்களின் தலைமையில் உபதலைவரின் தெரிவு இடம் பெற்றது.
இதில் சுயேட்சைக்குழு (தபால் பெட்டி) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கைலைநாதன் வைரவநாதன் எவ்வித போட்டியிம் இன்றி முன்மொழியப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கூட்டத் தொடருக்கு பார்வையாளர்களாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் -
Reviewed by Author
on
April 17, 2018
Rating:

No comments:
Post a Comment