121 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்த கனடா நகரம் -
கனடாவிலேயே Squamish நகரத்தில் மிக அதிகமாக 27.8 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 26 ஆம் திகதி தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது.
இன்று(வெள்ளிக்கிழமை) பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள் பகுதிகளில் வெப்பமாகவும், தெற்கு கடற்கரை பகுதியில் மதியமும் மாலையிலும் கடற்காற்று வீசுவதால் வியாழக்கிழமையை விட குறைவான வெப்பமும் காணப்படும் என வானிலை ஆராய்ச்சியாளர் Mark Madryga கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை தெளிவான வானத்துடன் 22 டிகிரி வரை வெப்ப நிலை உயரும்.
வார இறுதியில் அப்படியே வானிலை மாறி மேகமூட்டம் மற்றும் சாரலுடன் வெப்ப நிலை 13 டிகிரி வரை மட்டுமே காணப்படும் குளிர்ச்சியான மாலைப் பொழுதுகளையும எதிர்பார்க்கலாம்.
தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவின் உள் பகுதிகளில் பல நாட்கள் வெப்பத்திற்குப் பிறகு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் குளிர்ந்த காற்றுடன் சாரலும் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
121 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்த கனடா நகரம் -
Reviewed by Author
on
April 28, 2018
Rating:

No comments:
Post a Comment