டிசம்பர் 15 உலகத்தில் மிகப் பெரிய பிரளயம் ஏற்படும்: பஞ்சாங்கத்தில் எச்சரிக்கை -
விளம்பி ஆண்டு வெண்பா படி பார்த்தால் மழை குறைவு என்று கூறப்பட்டாலும் சுக்கிரன் பலமாக இருப்பதால் பருவமழைகள் நன்றாக பெய்யும் எனவும் காற்றின் பலம் அதிகமாக இருக்கும் எனவும் தானியங்களின் விலைகல் குறையும் மற்றும் புதிய நோய்கள் மக்களை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் மேகத்தில் கர்ஜனை ஏற்பட்டு ஆடி மாதம் அதிக அளவில் சூறாவளி ஏற்பட்டு புரட்டாசியில் சூறாவளி காற்றால் மழையும், இதன் காரணமாக செல் போன் டவர்கள் பாதிப்புகள் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தில் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய அணைகள் நிரம்புவதுடன், 2018-ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் 15-ல் உலகத்தில் மிகப் பெரிய பிரளயம் ஏற்படுவதுடன் பனி உருகி இந்தியாவின் சீதோண நிலை முற்றிலும் மாறும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி சதுரகிரி, மூணாறு, ஜவ்வாது மலை, மேகமலை,திருப்பதி ஏற்காடு மலைப்பகுதிகளில் தீ விபத்து, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது மக்களை பீதி ஏற்படுத்துவதற்கோ, அச்சத்திற்காகவோ எழுதப்பட்டது அல்ல இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டு என்றே எழுதப்பட்டுள்ள்து.
வரும் 2019-ஆம் ஆண்டு விளம்பி புத்தாண்டில் ஜனவரி மாதம் பிரபல நடிகர் அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பார் எனவும் பிப்ரவரி மாதம் அதாவது மாசி மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சியால் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் புயல், வெள்ளச் சேதம், பாதிப்பு பற்றியும், பூமி அதிர்வு, நிலநடுக்கம் பற்றியும் கணிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று தென் மாவட்டங்களில் ஓகி புயல் தன்னுடைய சுய ரூபத்தை காட்டியது, அதைத் தொடர்ந்து கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னியாகுமரி நிலைகுலைந்து நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 15 உலகத்தில் மிகப் பெரிய பிரளயம் ஏற்படும்: பஞ்சாங்கத்தில் எச்சரிக்கை -
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment