ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால் ஆரோக்கியம்? -

இது அனைத்தும் அவர்கள் எவ்வளவு தண்ணீர் அல்லது பானங்களைக் குடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து வேறுபடும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
ஒரு நாளைக்கு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 1000 முதல் 1500 மிலி சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படும். ஆனால் 400 மிலி-க்கும் குறைவாக சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு வெளியேற்றப்படுகிறதோ, அவர்களது உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
உடல் வறட்சி, தொற்றுகள், சிறுநீரக பாதை சுருக்கம், குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவை தான் குறைவான சிறுநீர் கழிக்க காரணம் ஆகும்.
ஒருவர் ஒரு நாளைக்கும் குறைவான அளவு சிறுநீர் கழித்தால், அவர்களது கால்கள், கைகள், முகம் போன்றவை வீங்கி காணப்படும். உங்களுக்கு இம்மாதிரியான வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்படாமல் இருக்க சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடவேண்டும்.
எலுமிச்சை ஜூஸ் சிறுநீர் பெருகி போன்று செயல்பட்டு, சிறுநீரைக் கழிக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
டான்டேலியன் வேர் சிறுநீர்ப் பெருக்கி போன்று செயல்பட்டு, சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும். மேலும் இந்த வேர் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.
ஆப்பிள் சீடர் வினிகர் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செய்யும். மேலும் இது உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றி, நீர்த்தேக்கத்தால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால் ஆரோக்கியம்? -
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment