கருவை பையில் போட்டு காவல் நிலையம் சென்ற சிறுமி: அதிர்ச்சி சம்பவம் -
அவர் காவல் நிலையம் சென்று அளித்துள்ள புகாரில், 7 மாதங்களுக்கு முன்னர் நபர் ஒருவர் என்னை கத்தி முனையில் பலாத்காரம் செய்தார். இதனால் கர்ப்பம் தரித்த எனது கருவை கலைக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
எனக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர்கள் என் கருவை ஒரு பையில் போட்டு அதை ஒரு ஆற்றுப் பகுதியில் வீசிச்செல்லுமாறு கூறினார்கள். பின் 20 ரூபாயை என்னிடம் கொடுத்து என்னை விரட்டி விட்டுவிட்டார்கள்.மேலும் இதனை வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார்கள்.
இறுதியாக, மிரட்டலுக்கு பயப்படாத சிறுமி, எஸ்.பி. அலுவலகத்துக்கு சென்று நீரஜ் பாண்டே என்பவர் மீது புகார் கொடுத்தார். இது பற்றி சாட்னா எஸ்.பி. ராஜேஷ் ஹிங்கர்கர் கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார்.
கருவை பையில் போட்டு காவல் நிலையம் சென்ற சிறுமி: அதிர்ச்சி சம்பவம் -
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment