பிரேசில் நாட்டில் வெடிகுண்டு வீசி ஜெயில் உடைப்பு; துப்பாக்கி சூட்டில் போலீசார் உள்பட 20 பேர் கொலை....
பிரேசில் நாட்டில் பெலேம் நகரில் சாந்தா இஷாபல் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட கைதிகள் இருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஜெயிலை உடைத்து கைதிகளை மீட்டு செல்ல ஒரு பிரிவினர் முயன்றனர். முன்னதாக வெடி குண்டு வீசி ஜெயிலின் ஒரு புற சுவரை தகர்த்தனர்.
அதை பயன்படுத்தி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சிறை காவலர்கள் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் சிறை காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு சிறை அதிகாரிகளும் சுட்டனர். இதற்கிடையே வெளியில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த அதிரடி தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.
அவர்களில் 19 பேர் கைதிகள். ஒருவர் சிறை காவலர். இவர்கள் தவிர மேலும் 4 சிறைக்காவலர்கள் குண்டு காயம் அடைந்தனர். இந்த அதிரடி எதிர் தாக்குதல் மூலம் ஜெயிலில் இருந்து கைதிகள் தப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிரேசிலின் அமேசான் பகுதியில் உள்ள மனாஸ் சிறையில் கலவரம் மூண்டது. அதை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 56 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிரேசில் நாட்டில் வெடிகுண்டு வீசி ஜெயில் உடைப்பு; துப்பாக்கி சூட்டில் போலீசார் உள்பட 20 பேர் கொலை....
Reviewed by Author
on
April 11, 2018
Rating:

No comments:
Post a Comment