இளவரசர் ஹரி திருமணம்: பிரித்தானிய பிரதமருக்கு அழைப்பு இல்லை -
இந்தத் திருமணத்துக்கு யார் யார் அழைக்கவேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் நடக்கவிருக்கும் தேவாலயத்தின் அளவு மற்றும் மணமக்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து திருமண அழைப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் நடைபெறும் St George’s Chapel சிறிய அளவில் இருப்பதால், கூட்டம் அதிகரித்துவிட்டால் அவர்களை சமாளிப்பது கடினம். அதுமட்டுமின்றி தற்போது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அதில் அதிகமானோர் Chapel வெளியே உள்ள மைதானத்தில் நின்றுகொண்டுதான் திருமணத்தை பார்க்க வேண்டிய நிலை வரும் என கூறப்படுகிறது.
ஹரிக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு நல்ல உறவு இருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பை அழைக்காமல் ஒபாமாவை திருமணத்துக்கு அழைப்பது அரசாங்க ரீதியான உறவுமுறைகளைப் பாதிக்கும் என்பதால் இருவருக்குமே அழைப்புகள் கிடையாது என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பிரித்தானிய பிரதமர் தெரசா மேவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதே நேரத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஹரி திருமணம்: பிரித்தானிய பிரதமருக்கு அழைப்பு இல்லை -
Reviewed by Author
on
April 11, 2018
Rating:
No comments:
Post a Comment