257 பேர் பலி -நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்:
அல்ஜீரியாவின் தலைநகர் Algiers-லிருந்து 200-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், போலிசாரியோ முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர், விமானப் பணியாளர்கள் 10 பேர் என 250-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
விமானம் போபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீற்றர் தொலைவில் திறந்த வெளிப்பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 257 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களை மீட்பு பணியினர் மீட்டு வருவதாகவும், காயமடைந்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் தெரிவிக்காத காரணத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் விமான விபத்தில் பொலிசாரியோ அமைப்பைச் சேர்ந்த 26 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மொராக்கோவுக்கு அருகே இருக்கும் மேற்கு சஹாரா பகுதியில் சுதந்திரம் வேண்டிய போராடும் குழுவைச் சேர்ந்தவர்கள் என அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதல் இணைப்பு
200 இராணுவ வீரர்களுடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.அல்ஜீரியாவில் Iliushin Il-76 என்ற இராணுவ விமானம் 200 இராணுவ வீரர்களுடன் இன்று காலை உள்ளூர் நேரப்படி 8 மணியளவில் Boufarik விமானநிலையத்திற்கு அருகில் உள்ள Boufarik-Blida தேசி நெடுஞ்சாலை அருகில் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், விபத்து நடந்த பகுதிக்கு 14 ஆம்புலன்சுகள், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானம் தரையிரங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், 105 பேர் இறந்துள்ளது உறுதிசெய்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
257 பேர் பலி -நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்:
Reviewed by Author
on
April 12, 2018
Rating:

No comments:
Post a Comment