மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் 8 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை பொலிஸில் முறைப்பாடு-(படம்
விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட 8 பிள்ளைகளின் தந்தையான மனுவேல் பிள்ளை (அல்பேட்) வயது-71 என்பவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த 26 ஆம் திகதி மதியம் வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பவில்லை.
அவரை தேடியும் எங்கும் கண்டு பிடிக்க முடியாத நிலையில் அவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் கடந்த சனிக்கிழமை(31) மன்னார் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 077-3284387, 071-6103546 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் 8 பிள்ளைகளின் தந்தையை காணவில்லை பொலிஸில் முறைப்பாடு-(படம்
 Reviewed by Author
        on 
        
April 04, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 04, 2018
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
April 04, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
April 04, 2018
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment