முல்லைத்தீவில் 1,183 மில்லியன் ரூபா நிதியினூடாக வேலைத்திட்டங்கள் -
முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மத்திய அரசினால் கடந்த ஆண்டில் 1,183 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அதனூடாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினாலும், ஆழிப்பேரலை அனர்த்தத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னரான மீள்குடியமர்வை தொடர்ந்து பல்வேறு நிதியொதுக்கீடுகளின் கீழ் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதியொதுக்கீடுகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியொதுக்கீடுகள் என்பவற்றின் மூலம் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டில் மத்திய அரசினால் சுமார் 1,813 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்று அதனூடாக 6,767 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினுடைய 415 வேலைத்திட்டங்களும், சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினூடாக 3,445 வேலைத்திட்டங்களும், ஏனைய எட்டு வகையான ஒதுக்கீடுகள் மூலமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் 1,183 மில்லியன் ரூபா நிதியினூடாக வேலைத்திட்டங்கள் -
Reviewed by Author
on
April 04, 2018
Rating:

No comments:
Post a Comment