கனடாவில் பயங்கரவாத தாக்குதல் - இலங்கையை சேர்ந்த பெண் பலி -
நேற்று முன்தினம் டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரும் பலியாகி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனார்.
இலங்கையை சேர்ந்த 48 வயதான ரேனுக அமரசிங்க என்ற பெண் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையில் ஹொரண பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
மக்கள் மீது வேண்டும் என்றே வாகனத்தை செலுத்தி அனர்த்ததை ஏற்படுத்தியவர் அங்கிருந்து தப்பியோடி இருந்தார். எனினும் அவர் கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் ஹொரன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கடந்த இரண்டு வருடங்களாக டொரொன்டாவில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
அந்த சம்பவத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதனை டொரொன்டோ மாஹாவிஹார பௌத்த நிலையத்தின் பிரதான தேரர் அஹாங்கம ரத்னசிறி உறுதி செய்துள்ளார்.
இலங்கை பெண்ணுடன் ஜோர்தான் நட்டவர் ஒருவரும், தென்கொரிய நாட்டை சேர்ந்த இருவரும் கனடாவை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் அனைவரும் தீவிரமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடாவில் பயங்கரவாத தாக்குதல் - இலங்கையை சேர்ந்த பெண் பலி -
Reviewed by Author
on
April 26, 2018
Rating:

No comments:
Post a Comment