எனது நாடித்துடிப்பு எகிறியது: வெற்றிக்களிப்பில் டோனி -
2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் களமிறங்கியிருக்கும் சென்னை அணி என்பதால் இந்த போட்டி குறித்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டம் வேறு நடைபெற்றதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதால், ரசிகர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள் என கேப்டன் டோனி கூறியுள்ளார்.
வெற்றி குறித்து அவர் கூறியதாவது, 2 ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இங்கு வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது.
என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது, அதனால்தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என் உணர்வுகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன், இங்கு வெளியில் அமரும்போது கிடையாது.
களத்தில் நம் உணர்வுகளை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுப்பதாகும்.
நாங்களும் ரன் கொடுத்தோம், கொல்கத்தா நன்றாக பேட் செய்தார்கள். இரு அணி பவுலர்களுக்கும் கஷ்ட காலம்தான் என்று கூறியுள்ளார்.
எனது நாடித்துடிப்பு எகிறியது: வெற்றிக்களிப்பில் டோனி -
Reviewed by Author
on
April 11, 2018
Rating:

No comments:
Post a Comment