போர்க்களமானது சென்னை அண்ணாசாலை: சீமான், பாரதிராஜா கைது -
இதனால், இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்ககூடாது என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அண்ணாசாலை முழுவதும் தமிழ் கொடிகளை கையில் ஏந்தி கொண்டு, எங்கள் நாடு தமிழ்நாடு...விடமாட்டோம் விடமாட்டோம் என தமிழன்டா...என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தி வருகின்றனர், இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா போன்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மைதானத்திற்குள் நுழைந்துவிட்ட நிலையில், ரசிகர்களும் பலத்த சோதனைக்கு பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட சீமானின் நாம் தமிழர் கட்சியினர், டோனி ரசிகன் சரவணன் என்பரை தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த போராட்டத்தினை பயன்படுத்தி பிளாக்கிள் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
போர்க்களமானது சென்னை அண்ணாசாலை: சீமான், பாரதிராஜா கைது -
Reviewed by Author
on
April 11, 2018
Rating:

No comments:
Post a Comment