உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா? -
வெயில் காலத்தில் உடல்சூட்டை தணிக்கவோ, வயிறு தொடர்பான கோளாறுகளுக்கோ அனைவராலும் பரிந்துரைக்கப்படும் உணவு தயிர்சாதம். அதே நேரத்தில், தயிர் சாதம் உடலுக்குக் குளிர்ச்சி தராது.
சூட்டைக் கிளப்பிவிடும் என்பது வேறு சிலரின் கருத்து. அதோடு தயிர்சாதம் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்கும் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
அவர்கள் கூறுவது உண்மையே என்று ஆமோதித்துள்ள மருத்துவர்கள் சாதாரணமாகவே வெயில் காலத்தில் உணவு செரிமானமாவதில் சிக்கலிருக்கும். தயிர்சாதம் சாப்பிட்டால் அது மந்தத்தை ஏற்படுத்தி, செரிமானக் கோளாறை இன்னும் அதிகப்படுத்திவிடும்.
அதனால் உடலில் சூடு அதிகமாகிவிடும். வெயில் காலத்தில் உடல் குளிர்ச்சிக்குத் தயிரைவிட மோரைச் சேர்த்துக்கொள்வது நல்லது என்று கூறுகின்றனர்.
தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். ஆனால், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்குத் தக்கவைத்துக்கொள்ள உதவும். மோருடன் இஞ்சி, பெருங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றைக் கலந்து குடிக்கலாம். சாதமாகச் சாப்பிடும்போது தயிரைப் பயன்படுத்தலாம், தவறில்லை.
மேலும் தயிர்தான் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, அதிலிருந்து வெண்ணையைக் கடைந்து எடுத்துவிட்டு மோராகப் பயன்படுத்தலாம். மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது. தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும்.
கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைச் சரிசெய்யும். மூலநோயைக் குணப்படுத்த உதவும்.
ஆனால் தயிர் உடலுக்குச் சூட்டைத்தான் கொடுக்கும். மூலநோய் உள்ளவர்கள் தயிர் சாப்பிடக் கூடாது மோர்தான் சாப்பிட வேண்டும்.
எனவே கோடைக்காலத்தில் தயிரை விடவும் , மோரைப் பயன்படுத்துவதே சிறப்பான நன்மை தரும்.
தயிரில் தண்ணீரைக் கலந்து, அதை மோர் என்று பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அது மோர் கிடையாது. தயிரைக் கடைந்து, அதிலிருந்து வெண்ணையைப் பிரித்தெடுத்தால் மட்டுமே அது மோர்.
உடல் சூட்டை தணிப்பதில் தயிர், மோர்: இரண்டில் எது பெஸ்ட் தெரியுமா? -
Reviewed by Author
on
April 08, 2018
Rating:

No comments:
Post a Comment