இந்தியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய ஆதாரம் சிக்கியது -
காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் உடைகள், இரத்தம் படிந்த மண் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் உள்ளிட்ட 14 பொருட்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறுகையில், தடயவியல் சோதனையில் குற்றவாளிகளுக்கு எதிராக அறிக்கை வந்துள்ளது. காவல்துறையினர் அளித்த ரத்த மாதிரிகளுடன் அவை ஒத்துப்போகிறது. இந்த அறிக்கை ஏப்ரல் 3ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு புலனாய்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கோவிலில் இருந்து இரண்டு தலைமுடிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.
தலைமுடியின் வேர்களை ஆராய்ந்ததில் ஒன்று படுகொலை செய்யப்பட்ட சிறுமியுடையது மற்றொன்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடையது என தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மிகவும் முக்கியமான ஆதாரமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
சிறுமியின் உடைகளில் இருந்த தடயங்களை உள்ளூர் காவல்துறையினர் மறைக்க முயற்சித்துள்ளனர். சிறுமியின் ஆடைகளில் இருந்த சேற்றை தண்ணீரைக் கொண்டு கழுவியுள்ளனர். மேலும் ஆடைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்துள்ளனர். இதனால் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் அந்த உடைகளில் இருந்த ரத்தக்கறை அழியவில்லை அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய ஆதாரம் சிக்கியது -
Reviewed by Author
on
April 23, 2018
Rating:

No comments:
Post a Comment