ஒரு நாளில் மட்டும் சிவனை தரிசிக்கும் சூரியன்:
இப்பூவுலகில் ஆங்காங்கே நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு அதிசய மிகு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பல சம்பவங்கள் அறிவியல் பூர்வமாக விஞ்ஞாணிகளால் கூட தீர்வுகிடைக்காத வகையில் இன்றளவும் ஓர் மர்மம் நிறைந்த அதிசயங்களாகவே உள்ளன.
அந்த வகையில், தமிழ்நாடு விருதுநகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முடுக்கங்குளம் பகுதியில் அமைந்துள்ளது அம்பலவாணர் திருக்கோவில். இங்கே மூலவராக அம்பலவாணரும், அம்மனாக சிவகாமி சுந்தரியும் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் உள்ள சிவனின் மீதே வியக்கத்தக்கும் வகையிலாக சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கிறது.
பாண்டியர் காலகட்டத்தில் கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ள இந்த சிவன் கோவிலில் வருடத்திற்கு ஒரே முறை மகா சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சிவனின் மீது விழுவது சாலசிறப்பாகக் கருதப்படுகிறது.
சிவபெருமானுக்குரிய விரத நாளான மகா சிவராத்திரியன்றும், பிரதோஷம், மார்கழி உள்ளிட்ட விசேச நாட்களிலும் கோவிலின் திருமுழக்கு முழங்க மாபெரும் விழா எழுப்பப்படுகிறது.
ராவணனின் மனைவியான மண்டோதரி இளம்வயதில் தனக்கிருந்த திருமணத் தடையை நீக்க முடுக்கங்குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு பூஜைகள் செய்தால். அதனைத் தொடர்ந்தே சிவனின் தீவிர பக்தரான ராவணரை திருமணம் செய்யும் பாக்கியம் மண்டோதரிக்கு ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டியரின் ஆட்சிக் காலத்திலே இக்கோவில் கட்டப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. அவற்றின் அடையாளமாக கோவிலின் ஒரு பகுதியில் முக்காலப் பாண்டியன் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
மாசி சிவராத்திரி தினத்தில் வேறெங்கும் நிகழாத அதிசயமாக இங்கு சூரியனின் ஒளி சிவனின் மீது படர்கிறது. இதற்காக கல் சாளரம் ஒன்று மூலவரின் சந்நிதி எதிரே உள்ளது.
கோவிலின் வாசலில் பிற கோவில்களைப் போலவே, விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தான் மண்டோதரி தனது திருமணம் சிறப்பாக நடைபெற அருள் பெற்றதால் இந்த விநாயகர் கல்யாண விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒரு நாளில் மட்டும் சிவனை தரிசிக்கும் சூரியன்:
Reviewed by Author
on
April 18, 2018
Rating:
Reviewed by Author
on
April 18, 2018
Rating:


No comments:
Post a Comment