உடல் உள்ளே ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த நவீன் சிகிச்சை முறை: விஞ்ஞானிகள் சாதனை -
உடலின் உட்பாகங்களில் ஏற்படும் இரத்தப் போக்குகள் அனேகமான சமயங்களில் மரணத்திற்கு வழிவகுத்துவிடும்.
எனவே இப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக ஊசி மூலம் உடலினுள் செலுத்தக்கூடிய பண்டேஜை கண்டுபிடித்துள்ளனர்.
இதனை உருவாக்குவதற்கு கடற்பாசி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர நனோ துணிக்கைகளும் பயன்படுதப்பட்டுள்ளன.
இந்த பண்டேஜ் ஆனது துரித கதியில் இரத்தப் போக்கினை நிறுத்துவதுடன் காயங்களையும் குணப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
Texas A&M பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவே இதனை உருவாக்கியுள்ளது.
மேலும் மனிதனிலும் ஏனைய விலங்குகளிலும் இந்த பேண்டேஜ் ஆனது வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது 3 நிமிடங்களிலும் குறைவான நேரத்தில் இரத்தப்போக்கு தடைப்பட்டுள்ளது.
உடல் உள்ளே ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த நவீன் சிகிச்சை முறை: விஞ்ஞானிகள் சாதனை -
Reviewed by Author
on
April 05, 2018
Rating:

No comments:
Post a Comment