அண்மைய செய்திகள்

recent
-

மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்: கமலஹாசன் ஆவேசம் -


காவிரி விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு செய்யும் அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில், Scheme என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதனைத் தொடர்ந்து, மே 3ஆம் திகதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இதற்கான காலக்கெடு முடிய இன்னும் ஒரே வாரம் உள்ள நிலையில், மத்திய அரசு மேலும் இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டு, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறது.
கர்நாடாக மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் மத்திய அரசு இவ்வாறு அவகாசம் கோரியுள்ளது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. ”தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி”, இந்த அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்: கமலஹாசன் ஆவேசம் - Reviewed by Author on April 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.