அண்மைய செய்திகள்

recent
-

கேப்பாபிலவு மக்கள் தொடர்ச்சியான போராட்டம் நடத்துவதையிட்டு மிகவும் கவலையடைகிறோம் -


நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி, பிரதமரிடம் எங்களுடைய பிரச்சினை தொடர்பாக கூறிய போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒன்றாக செயற்பட்டு தீர்வினை காண்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இனிவரும் நாடாளுமன்ற அமர்வில் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுப்படும். குறிப்பாக கேப்பாபிலவு மக்கள் தொடர்ச்சியான இந்த போராட்டத்தை நடத்துவதையிட்டு மிகவும் கவலையடைகிறோம்.

இந்த மக்களின் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே உடன்பட்டவாறு தீர்வினை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்
கரைத்துறைப்பற்று, கொக்குத் தொடுவாய் பகுதியில் தமிழர்களுக்கு சொந்தமான 2500 ஏக்கர் வயற்காணிகள் மகாவலி அபிவிருத்தி திட்டம் என்னும் போர்வையில் அபகரிக்கப்பட்டது.


இந்த நிலையில், அந்த பிரதேசத்தை சாராதவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து முழுமையாக சிங்கள குடியேற்றமாக மாற்றப்படும் நிலைமை காணப்பட்ட பொழுது நானும், தலைவர் சம்பந்தனும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் குடியேற்றங்கள் இடம்பெறுமானால் அது அங்குள்ள தமிழ் மக்களுக்களை குடியேற்றப்படல் வேண்டும்.
மகாவலி திட்டம் அற்த பிரதேசத்திற்கு வழங்குவதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் அல்லாத எவரையும் அப்பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம். இதற்கு ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவு நிலமீட்பு போராட்டம் இன்றும் 408 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், கிராமத்தில் மொத்தமாக 171 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் மக்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்த போதும் 132 ஏக்கர்களை மட்டுமே மக்களிடம் ஒப்படைத்துள்ளனர் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபிலவு மக்கள் தொடர்ச்சியான போராட்டம் நடத்துவதையிட்டு மிகவும் கவலையடைகிறோம் - Reviewed by Author on April 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.