வறட்சியால் முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு -
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசம் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக சிறிய குளங்கள் மற்றும் நீர் நிலைகள் மிக வேகமாக வற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீரினை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மேட்டு நிலங்களாக காணப்படும் மல்லிகைத்தீவு, வேணாவில், புதுக்குடியிருப்பு மேற்கு மந்துவில், இரணைப்பாலை, தேவிபுரம், மன்னாகண்டல், கைவேலி, சுதந்திரபுரம், உடையார் கட்டு, விசுவமடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 3179 குடும்பங்களை சேர்ந்த 10,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு -
Reviewed by Author
on
April 08, 2018
Rating:

No comments:
Post a Comment