இலங்கை தமிழ் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி: வெளியான அதிர்ச்சி தகவல்.. -
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அனுப்படும் இலங்கை தமிழ்ப்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி போடப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான செய்தியை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் தி கார்டியான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிலும் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு என்று பணிக்கு ஆட்களை அனுப்ப அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிறுவனங்கள் தாங்கள் வீட்டு வேலை செய்ய அனுப்பும் பெண்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு கர்ப்பமாக மாட்டார்கள் என அங்கு வேலைக்கு அமர்த்துபவர்களிடம் உறுதியளிக்கின்றனர்.
எனவே இதை நிறைவேற்றும் விதத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப தெரிவு செய்யப்படும் பெண்களுக்கு கருத்தடை ஊசி போடப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய ஒரு நிறுவனத்தின் முகவர், வெளிநாடுகளுக்கு அனுப்பபடுவர்களுக்கு அரசு சார்பாக மருத்துவ சோதனை நடைபெறும், அதன் பின்னரே நாங்கள் கருத்தடை சாதனங்களை அளிக்கிறோம் என கூறியுள்ளார்.
இது, டெபோ ப்ரோவெரா என்னும் மருந்து ஊசி வழியாக செலுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான ஆண்கள் இறந்துவிட்ட நிலையில் குடும்பத்துக்காக உழைக்க பெண்கள் இது போன்று வெளிநாடுகளுக்கு சென்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
இலங்கை தமிழ் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி: வெளியான அதிர்ச்சி தகவல்.. -
Reviewed by Author
on
April 08, 2018
Rating:

No comments:
Post a Comment