மன்னாரில் வெகு சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு விழா -
இது குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் தலைமன்னார் பியர் அ.த.க பாடசாலையில் இடம்பெற்றது.
“மதங்களுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும் விழாக்களை கொண்டாடுதல்” எனும் தொனிப்பொருளில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டு குறித்த தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எம்.டி.ஜயசிங்க கலந்து கொண்டார்.
மன்னாரில் வெகு சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு விழா -
Reviewed by Author
on
April 27, 2018
Rating:

No comments:
Post a Comment