தென்னிந்திய திரை நட்சத்திரம்!! வட மாகாண முதல்வருடன் சந்திப்பு!!
தமிழக சட்டசபையின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் என அழைக்கப்படும் கருணாநிதி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை திறந்து வைக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு கருணாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.கருணாஸுடன் சட்டத்தரணி க.சுகாஷும் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கும் கருணாஸ் சென்று அவர்களையும் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிந்திய திரை நட்சத்திரம்!! வட மாகாண முதல்வருடன் சந்திப்பு!!
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment