மன்னாரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை ஒழிக்க பொலிசார் புதிய நடவடிக்கை-(படம்)
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய மது போதை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டலில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் படி வன்னி பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் போதைப் பொருள் கடத்தல் மது போதை மதுசார தவிற்பிற்காக அமைக்கப்பட்ட கிராமிய மதுபோதை ஒழிப்பு குழுவிற்கு வலுவூட்டல் வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை(5) மாலை வன்னி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோண் அவர்களினால் வைபவ ரீதியாக மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மது போதை தவிர்ப்பு வேலைத்திட்டம் வன்னிப் பிராந்தியம் என்னும் தொனிப்பொருளில் குறித்த நடவடிக்கைக்கு பொலிஸ் பொது மக்கள் சிவில் அமைப்பை முற்றாக ஈடுபடுத்தும் நோக்கில் மாவட்ட பகுதிகளிலுள்ள பல்வேறு தரப்பினர் சுமார் 700 பேர் வரை கலந்து கொண்டு குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக பிரத்தியேக கைபேசி சிம்கார்டுகள் இலவசமாக சிவிலமைப்பு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு வன்னி பிராந்திய பொலிஸ் அத்தியட்கரினால் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பு தலைமைக்காரியலயத்திலிருந்து வருகை தந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் வருகை தந்திருந்த சிவில் அமைப்பினருக்கு விழிப்புனர்வு செயலமர்வை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையை ஒழிக்க பொலிசார் புதிய நடவடிக்கை-(படம்)
Reviewed by Author
on
April 06, 2018
Rating:

No comments:
Post a Comment