தமிழ் பட வெளியீட்டில் புதிய மாற்றம் - ஏகோபித்த ஆதரவு !
தமிழ் சினிமாவில் தற்போது நிலவி வரும் ஸ்ட்ரைக் சூழ்நிலையில் பல திரையரங்குகளை புதுப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கமும் புதிய டிஜிட்டல் சேவையை செய்யும் ஏரொஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. நேற்றே தயாரிப்பாளர் சங்கத்திடம் அனைத்து திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கவேண்டியது,
சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது திரைப்பட வெளியீட்டில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். அதாவது இனி படங்களின் வெளியீடு என்பது அந்தப் படங்கள் எந்த தேதியில் சென்சார் ஆனதோ அதை வைத்தே முன்னுரிமை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய படங்களோ, சிறிய படங்களோ, எந்தப் படம் முதலில் சென்சார் செய்யப்படுகிறதோ, அந்த வரிசைப்படிதான் படங்களை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.இந்த திட்டத்துக்கு தயாரிப்பாளர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பட வெளியீட்டில் புதிய மாற்றம் - ஏகோபித்த ஆதரவு !
Reviewed by Author
on
April 15, 2018
Rating:

No comments:
Post a Comment