ஆயுத போராட்டத்தை போன்று த.தே.கூட்டமைப்பை பலவீனப்படுத்த முயற்சி -
களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலை வைத்து கொண்டு கட்சிகள் தொடர்பிலான எந்த கணிப்பீடுகளையும் செய்ய முடியாது. இந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை கட்சிகளுக்குரிய வாக்குகளாக கருத முடியாது. இது குடும்ப தேர்தலாகவே பார்க்கவேண்டியதொன்றாகும்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தல் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவித வீழ்ச்சியும் ஏற்படவில்லை என்பதை காணமுடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவினை பயன்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை வடக்கு, கிழக்கில் முன்னெடுக்க முடியும்.
அரசியல் ரீதியான தீர்வினை இந்த காலத்தில் பெறமுடியாவிட்டால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கான அரசியல் ரீதியான தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணித்து வருகின்றது.
இந்த காலத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை நாங்கள் காணாவிட்டால் எதிர்காலத்தில் அவ்வாறான தீர்வினை பெற்று கொள்வது என்பது மிகவும் கஸ்டமான நிலையாகவே இருக்கும். அதன் காரணமாகவே மாற்று பாதைகளில் பயணித்த நாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்துள்ளோம்.
நாங்கள் ஆயுதப்போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி ஆயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துகளையும் இழந்துள்ளோம். இழந்த உயிர்களுக்கு எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லாமல் போகக்கூடாது. தமிழ் மக்களுக்கான உரிமையினை பெற்றெடுக்க வேண்டும் என்றே பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளோம்.
தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதனை பலவீனப்படுத்தியது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தி அதனை பலவீனப்படுத்தலாம் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எங்களால் காணமுடிகின்றது.
இவ்வாறான காலப்பகுதியில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரினால் முன்னெடுக்கப்படும் நகர்வுகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தமிழ் மக்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆயுத போராட்டத்தை போன்று த.தே.கூட்டமைப்பை பலவீனப்படுத்த முயற்சி -
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment