மட்டக்களப்பின் இறுதி பிரதேசசபை அதிகாரத்தினையும் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தவிசாளர் தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ந.கோணலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் க.கணேஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டதுடன் திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோணலிங்கம் 10 வாக்குகளையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கணேஸ் 08 வாக்குகளையும் பெற்றதன் அடிப்படையில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நமசிவாயம் கோணலிங்கம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சினை சேர்ந்த முகமட் தாகீரின் பெயர் முன்மொழியப்பட்டதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களினால் எம்.சந்திரபாலவின் பெயர் முன்மொழியப்பட்டது.
இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினால் எம்.சந்திரபால 10 வாக்குகளைப்பெற்று பிரதி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டதுடன், முகமட் தாகிர் 08 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பின் இறுதி பிரதேசசபை அதிகாரத்தினையும் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment