முடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக் -படங்கள் வெளியாகும், ஷூட்டிங் மீண்டும் துவங்கும்.
கடந்த ஒன்றரை மாதமாக நடந்துவந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் ஸ்டிரைக் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இன்று நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தனர். மேலும் விஷால் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இனி படங்களுக்கு ஏற்ப தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படும்,
ஜூன் 1 முதல் டிக்கெட் புக் செய்ய குறைந்த கட்டணத்தில் ஒரு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படும் என விஷால் கூறியுள்ளார். தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை முதல் படங்கள் வெளியாகும், ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுக்கு வந்தது சினிமா ஸ்டிரைக் -படங்கள் வெளியாகும், ஷூட்டிங் மீண்டும் துவங்கும்.
Reviewed by Author
on
April 18, 2018
Rating:

No comments:
Post a Comment