அண்மைய செய்திகள்

recent
-

கர்ப்பிணிகள் மசாலா உணவை அதிகம் உட்கொண்டால் என்னவாகும்?


கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வித்தியாசமான சில உணவுகளை உண்ணத்தோன்றும், இதில் மாங்காய், சாம்பல் போன்றவை அடக்கம்.
இந்த நேரத்தில் தான் நாம் டயட் என்பதையெல்லாம் மறந்து மனதுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் ஒரு கை பார்ப்போம்.
ஆனாலும் சில பழங்கால வழக்கப்படி கர்ப்ப காலத்தில் அதிக காரம் மற்றும் மசாலா இணைந்த உணவுகளை உட்கொண்டால் அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவதுண்டு.
இது முற்றிலும் உண்மையல்ல, உண்மையில் குழந்தை வயிற்றில் இருக்கும்போது இதுபோல உண்பதால் குழந்தையின் சுவைகள் விரிவடைந்து அவை வெளியுலகுக்கு வரும்போது விதம் விதமான உணவுகளை ருசிக்க அவர்களின் உடல் தயாராக இருக்கும்.
ஆகவே மசாலா அதிகமாக உண்பதால் வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு நேரடி தீங்கு எதுவும் இல்லை.
இதுபற்றிய நிபுணர்களின் கருத்துப்படி பார்க்கையில், கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சிறிதளவே அம்னோடிக் திரவத்திற்கு சென்றடைகிறது.
இருப்பினும் அளவுக்கு அதிகமான எதுவும் நஞ்சுதான் என்பதால் கர்ப்பத்தை தாங்கும் நம் உடல் சில காரம் அல்லது மசாலா உணவுகளால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. அவை என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.
செரிமான அசௌகரியங்கள்
காரமான உணவுடன் தொடர்புடைய பொதுவான புகார்களில் நெஞ்செரிச்சல் ஒன்றாகும். கர்ப்ப காலத்தின் போது, ​​வயிற்றில் வளர்ந்து வரும் கருவிடமிருந்து அதிகரித்த அழுத்தம் ஏற்படுகிறது, இது அமில சுத்திகரிப்புக்கு வழிவகுக்கும்.
உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் உயிர்ச்சத்து குழாய்க்குள் செல்ல நெஞ்செரிச்சல், புளிச்ச ஏப்பம் மற்றும் குமட்டல் போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் மார்பிலும் தொண்டையிலும் நீங்கள் அசௌகரியம் அடைந்திருப்பதை உணர்வீர்கள், அதிகப்படியான மசாலா உங்கள் வயிற்றின் மென்மையான சமநிலையை பாதிக்கலாம், இதனால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

காலை நேர குமட்டல்கள்
பொதுவாகவே ஒரு உயிரை நம் உடல் தாங்க ஆரம்பிக்கும்போது சில முக்கிய அசௌகரியங்கள் இருக்கும். அதில் ஒன்றுதான் காலை நேரம் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் மயக்கம்.
இது அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் இணைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது அதிகரிக்கின்றது. சில வாசனை ஒவ்வாமைகளும் ஏற்பட்டு அதன் மூலமும் வாந்தி ஏற்படலாம்.
ஆகவே கர்ப்ப காலத்தில் புதிய மசாலா உணவுகளை எடுக்காதீர்கள்.

GERD குறைபாடுகள்
அதிக காரமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் GERD எனப்படும் இரைப்பை குடல் அழற்சி நோய்க்கு ஆளாக நேரிடலாம், அல்லது ஏற்கனவே GERD இருப்பின் இந்த நோயின் தாக்கம் அதிகரிக்க கூடும்.

ஆகவே , உங்களுக்கு கர்ப்ப காலத்தில் காரமான உணவுகளை உட்கொள்ள ஆசையாக இருந்தால் மிதமான அளவில் எடுத்துக் கொண்டால் உடல் சமநிலை அடையும் அல்லது உண்மையாகவே நீங்கள் காரமான உணவுகளுக்கு ஏங்கிக் கொண்டிருந்தால் முதலில் சிறிது சிறிதாக உட்கொள்ள தொடங்குங்கள்.
இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் வயிறு எவ்வளவு காரத்தை தாங்கி கொள்ளும் என்கிற தெளிவைக் கொடுக்கும். மேலும் நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்பட்டால் காரமான உணவைத்தொடர்வது நல்லதல்ல.
அதுமட்டுமின்றி உண்ணும் மசாலா மற்றும் காரமான பொருட்கள் சுத்திகரிக்கப்பட்டவையா கலப்படமற்றவையா என்பதை பார்த்து உண்ண வேண்டும்.
கர்ப்பிணிகள் மசாலா உணவை அதிகம் உட்கொண்டால் என்னவாகும்? Reviewed by Author on April 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.